குரோடன்ஸ் செடிகள்.
காலையில் செல்லும் பொழுது குரோடன்ஸ்
செடிகளை வருடிச் செல்கிறாய்..
மாலையில் அதற்கு நீர் ஊற்றுகிறாய்
இரவில் அதன் அருகே உட்கார்ந்து நிலா சோறு
சாபிடுகிறாய்..
குரோடன்ஸ் செடிகள் மீது காதலா என்றேன்?
கண்கள் பனிக்க சொன்னாய் உன் செல்ல நாய்க்குட்டி அதன் அடியில் உறங்குவதாய்..