மொழிகளில்லை அன்பிற்கு !
எல்லா மொழிகளிலும்
எங்கெங்கும்
தேடி அலைகிறேன் ..
பாசத்திற்கு பதில் சொல்ல ..
வார்த்தைகள் தொலைந்துவிட்டன ..
ஈடில்லா எதிர்பார்ப்பில்லா
இறையன்பான பெற்றோரின் அன்பிற்கு
இணை எதுவுமில்லாததால்
மௌனமான நன்றியுணர்வே என் பதிலாய் !
என் கடைவிழியோரத்தின்
கண்ணீர்த்துளியே ,என் பூஜைக்குப்
பன்னீராக !