அப்பா .

அன்னையெனும்
அதிசயக்
கரம் பிடிப்பார் !
அங்கே
ஆண்மை எனும்
அற்புத
விதை விதைப்பார் !

அறுவடை
தான் பார்த்து
ஆகாயம்
மேல் குதிப்பார் !

யானை என்றும்
சிறு குதிரை என்றும்
வீட்டிற்குள்
பிள்ளை பொதி சுமப்பார் !

நடை வண்டி
நான் பிடித்து
நான்கு எட்டு வைகயிலே
இரை தேடும்
இயந்திரம் ஆவார் !

மூங்கிலும்
இவரும்
ஒன்றுதான்

வலி மேவி
துளை தாவி
உதடுகள் தீண்டும்போது
புல்லாங்குழல் ஆகிறார் !

அப்பாவெனும்
ஆலம் விழுதாகிறார் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (17-Sep-13, 1:26 am)
Tanglish : appa
பார்வை : 69

மேலே