காதல்....ஒரு ஜனநாயக சர்வாதிகாரம்....
ஆம்!
காதல் ஒரு ஜனநாயக சர்வாதிகாரம் தான்.....
மூச்சிலும் அதன் தலையீடு......
உள்ளதென்பது என் முறையீடு....
அவள் அருகில் இருந்தால்....
அனலாகும்.....
விலகிச் சென்றால் விலக்காகும்.....
ஆம்!
காதல் ஒரு ஊழல் தான்....
இதய பேர ஊழல்....
நெஞ்சத்திற்கு லஞ்சம் கொடுத்தேனும்....
பஞ்சமில்லாமல் பரவும்...
அவளின் நினைவுகள்...
ஆம்!
காதல் ஒரு பொய் தான்.....
அவள் கொலுசின் அசைவுக்கும்.....
அவளுக்கே பெருமை சேர்க்கும்....
அவள் கூந்தலின் பூக்கள்....
கூந்தலால் அழகாகும்....
இருப்பினும் என் செய்ய?
"ஊரோடு ஒத்து வாழ்..."
என கவிக்கிழவி சொல்லி விட்டாள்..
பின் காதல் செய்வதில்
என் பிழை என்ன?