கட்டணம் இல்லாத பள்ளிக் கூடங்கள்

வளைந்து கொடுப்பது தப்பில்லை - அதை
வானவில்லிடம் பழகுங்கள்
முடிந்து தொடரும் முயற்சியை - தோட்ட
முருங்கையிடம் பழகுங்கள் - மனம்
இமை திறந்து படித்து விட்டால்
இனிய பாடம் ஏராளம் - நாம்
இண்டர்நெட்டை வைத்துக் கொண்டு
இனிமை தேடி அலைவது ஏன் ? - நம்
நினைவு என்ற வேத வரிகள்
நிதம் மானிட்டரில் மரணிப்பது ஏன் ?
ஆடம்பரத்தை அவசியமாய்
அல்லும் பகலும் நினைத்து விட்டோம்
அதனாலே நிம்மதியை
அழகுறவே தொலைத்து விட்டோம்.....!