இது நம்ம பூமி

தீக் காடு
இந்த பூமி
ஓடோடி
முந்து சாமி......

சாக்காடு
வந்து சேரும்
சாயாதே
அந்த நேரம்......

பூட்டோடு
போராடு
ஏட்டோடு
பதில் தேடு.....

வீட்டோடு
நிஜம் சேரு
நாட்டோடு
கரம் சேரு.......

காட்டாறு
கணம் தோறும்
நீந்தி பாரு
அது ஜோரு ....

ஓயாதே
ஒரு போதும்
போராடி
புயலாகு......

நிழல் கூட
தீயாகும்
தேயாதே
வரம் தேடு.......

திக் திக்
இந்த பூமி
தீர்வை தேடி
ஓடு சாமி.....

எழுதியவர் : கவிஜி (17-Sep-13, 2:38 pm)
Tanglish : ithu namma poomi
பார்வை : 86

மேலே