என் பயணங்கள்

நான் பிறந்தது முதல்
தாயின் மடியிலும்
தந்தையின் தோளிலும்

ஓரிரு வயது வரை
தலையணையுடன் உருளுவதிலும்
தரையிலே தவழ்வதிலும்

அதன்பின் ஐயிரண்டு வயது வரை
நடப்பதிலும், ஓடுவதிலும்
அவ்வப்போது அப்பாவுடன்
மிதிவண்டியிலும்

பள்ளி, கல்லூரி செல்லும் வரை
பேருந்தின் படிக்கட்டுகளிலும்

சில காலம்
ஒய்யாரமாய் எனது
மோட்டார் வண்டியிலும்

வேலை முடிந்து வாரம் ஒருமுறை
வீட்டிற்கு செல்லும்போது
பேருந்துகளிலும்

தொடரும் என் பயணங்கள்

நான் இருக்கும் வரை
என் இறுதி வரை
என்றும் முடிவதில்லை

இறந்தபின் எங்கு
செல்வேனென்று தெரியவில்லை

அதனால் அதற்கு
பிறகு எழுதவில்லை..

எழுதியவர் : நவீன் (17-Sep-13, 2:59 pm)
Tanglish : en payanangal
பார்வை : 111

மேலே