மகா நதி

கொக்கே கொக்கே
குட் ஈவினிங் - உன்
கொடும் பசி உணர்கிறேன்
குட் ஈவினிங்.....
கழிவில் கலந்து
அழுகிப் போனேன்
கவலையில் மூச்சு முட்டி
இறந்து போனேன்
சாயக் கலவையை
சத்தமின்றி கலந்தான்
சாத்தான் மனிதன் என்
சங்கினை நெரித்தான் .
மீண்டும் மீனாய்
நான் பிறந்தேனானால்
கானல் நீரில்
நீந்தப் பழகி.....
காற்றில் பறந்தே என்னை
கவ்விக் கொள் என்று சொல்வேன்
கடும்தவம் நீயும் புரியாதே
கருவாடாய் நானும் ஆகி விட்டேன்....
என்று புனிதமாகும்
என் நாட்டு நதிநீர்.........?
என்று நீ ஏங்கினால்
ஏமாந்துதான் போவாய் கொக்கே கொக்கே.....!
தாமிர பரணியும்
கூவம் - மனிதன் தொட்டதால் கங்கையும் ஐயோ
பாவம்........!
இதோ
என் உடலின் நாத்தத்தை விட கொடிதாக
என்னோடு மிதந்து வரும் மனித சடலம்.....!
இப்படிக்கு
இனிய கருவாடு...!