சிறகடித்து சிகரம் தொடலாம் !....

வெளிச்சம் தேடி
அலைந்து விளக்கில் வீழும்
விட்டில்களுக்குத் தெரிவதில்லை ...
தனக்குத் தானே
ஒளியாகிக் கொள்ளும்
மின்மினிகளும் உண்டென!

வழி தேடி பழியாகும் அனைவரும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
தன் விழிகளே வழிகளின் திறவுகோல்
என்பதை !

விசாலமான விழிப் பார்வை
அலைபாய்ந்தால்,
விரல்களும் மீட்டும் விரும்பும்
கானம் ஒன்றை!..

சிகரத்தின் உச்சியை
பெரு முயற்சியால்
சீக்கிரம் தொட !

எழுதியவர் : கார்த்திகா AK (17-Sep-13, 6:30 pm)
பார்வை : 124

மேலே