ஜன்னலோர கம்பிகள்
பாலை வணக்காடு
பச்சை புல்வெளி
பகை மறந்த
பார்வை...!
பசித்த வயிறு
ருசிக்க
மறுக்கும்
நாவு...!
ஜன்னல்
கம்பிகள்
ஒன்றுக்கு பின்
ஒன்றாக
உறவாகின..!
நகம் கடித்து
ரத்தம்
கசிந்தும்..!
மனதில்
தோன்றும்
சிகப்பு சாயம்
விரல்நுனி பட்டு
விசும்புகிறது..!
மேளதாளம்
சத்தம்
இருதய
துடிப்பின்
மிச்சம்...!
தலையணி
ஈரகோடுகள்..!
கண்ணீர்
வழித்தடங்கள்..!
தாயின்
ஏக்கப் பார்வை
தினமும்
இமைகூந்தால்
நனைகிறது...!
முற்றம்
பார்த்தே
முடிகிறது...!
மூச்சு
காற்றால்
பேசியே
முடிந்து
விடுவேனோ
*முதிர்கன்னியாக*
*****கே.கே.விஸ்வநாதன்****