கவிதை

கண்ணிருக்கும் புன்சிரிப்புக்கும் பாலம் போட்டு
நடந்து செல்ல செய்வதோ கவிதை
நட்சத்திரத்தை பனிதுளியாக்கி ஏழை பூவில்
உட்கார வைக்க நினைப்பதும்
எல்லா மதத்து கடவுளையும் ஒருவருக்கொருவர்
கை குலுக்க செய்வதும்
இளமை என்னும் பள்ளத்தாக்கை பூக்கள் போட்டு
நிரப்பி வைத்து ரசிப்பதும்
பருவமான பின்பும் குழந்தை போல
இயல்பு மாற்றம் செய்து கொண்டு
வெடிப்பதும் கவிதை
கவிதை என்னும் மூச்சு ஒவ்வொரு கவிஞனும்
ஒவ்வொரு கவிதாயினும் மூச்சு இருக்கும் வரை
கவிதை இந்த உலகில் வாழும் .

எழுதியவர் : vinayak (18-Sep-13, 12:48 pm)
சேர்த்தது : vinayak
Tanglish : kavithai
பார்வை : 53

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே