நினைவு

கடலில் உள்ள மீன்களுக்கு தெரியாது
கரைக்கு வந்தால்
கருவாடாகி விடுவோம் என்று
அது போல,
மண்ணில் உள்ள மனிதர்களுக்கு தெரியாது
மாண்டுவிட்டால்
மக்கள் மனதிலிருந்து மறைந்து விடுவோம் என்று
ஆனால்,
மகான்கள் மாண்டுவிட்டால் ,
மக்கள் மனதிலிருந்து மறைய மாட்டார்கள்
மாறாக ,
மண்ணில் தோன்றும்
மனித உயிர்கள் மறையும் வரை
அவர்கள்,
மக்கள் மனதில் நிறைந்திருப்பர்
எதாவது ஓரிடத்தில் நினைவாக .
சிந்தித்துப் பார்
சிறு இடமாவது கிடைக்கும்
மக்கள் மனதில்