பிரிவு

இங்கு பட்டினியோடு படுத்தாள்
பக்கத்து வீட்டு சொந்தங்கள்,
படைத்த உணவை பரிமாறும்...
நான் செல்கின்ற இடம் எப்படியோ.....??
இங்கு கழனியிலும், காடுகளிலும் எங்கள் கால்படாத இடம் கிடையாது..
ஆனால் இப்போது போகின்ற இடத்தில் இதுவரை என் கால் பட்டதே கிடையாது...
படித்த படிப்பிற்கு
வேலை கிடைக்கும் என்றால்
காலம் சென்றுவிடும்
கடன் உச்சியை தொட்டுவிடும்....
கவிபாடும் கருங்குயில்களையும் காடுகளையும் விடுத்து.
கார் ஓட்டச் செல்கிறேன்,,,
பசுமை நிறைந்த கிராமத்தை விடுத்து பாலைவனம் செல்கிறேன்..
.
கடன் சுமந்த மனதோடு
கடல் தாண்டி போகிறேன்....
கலங்காதே அன்னையே
காலம் கடக்கட்டும்,,,
பணம் சேர்த்து
கடைசி தங்கையை கரை சேர்க்க வருகிறேன்.......