.........உரசல்.........

நீ கைகள் உயர்த்தி கொட்டாவி விட்டு,
நெட்டி முறிக்கிற சமயம் !
பாய்ந்து கட்டியணைத்து,
கசக்கிப்போட்டுவிட எத்தனிக்கும்,
எந்தன் திட்டமிடும்,
கட்டுக்கடங்காத மனது !
ஆனாலும் அவ்வமயம் !!
இடம் பொருள் ஏவல் கருதி,
கூடுதல் ஒப்பனையில்,
விட்டம் பார்க்கவோ !
அல்லது கற்சிலையாய்,
கண்டும் கானாமலுமோ,
நிற்கவேண்டிய கட்டாயமிருக்கிறது,
ஊசலாடும் உணர்வு தங்கிய உயிர்க்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (18-Sep-13, 6:18 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 57

மேலே