விடை இல்லா கேள்விகள் முடிந்தால் விடை கூறுங்கள் ??!!!!!!

சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து
சமத்துவம் என்றுவரும் - வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு
கேளா நாள்வருமா?

சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள்
சிரித்திட வழிவருமா - உடல்
தெருநடு வீதி தனில்விழும் அந்த
ஓருநிலை மாறிடுமா?

மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான்
மண்ணில் வந்திடுமா? - மொழிச்
சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச்
செகத்தில் நாள் வருமா?

அடக்கு முறையும் அசுரத் தனமும்
அடியோடு ஓடிடுமா? - இனி
நடக்கும் காலம் தனிலே தானும்
நன்மை கூடிடுமா?

அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து
அகிம்சை நிலை பெறுமா? - புவி
விடிவு என்று புலரும் பொழுதை
விரைவில் ஏற்றிடுமா?

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (18-Sep-13, 6:18 pm)
பார்வை : 160

மேலே