புதிரான கேள்வி

கண்களின் நீர் வழிய
என் கைகளில் நடுக்கம்!!!

என்னவள் அவள் என் தாய்
நான் அவள் அன்பை மறுத்தபோது
பட்ட வேதனை !!!!

இன்று அறிந்தேன்
என் குழந்தை என் அன்பை
மறுக்கும் நேரம் !!!!

என்னிடம் ஒரு கேள்வி
உனக்கு நான் தேவையா?
உன் கணவன் தேவையா? என்று

நானும் பதில் அளித்தேன்

நான் எழுதுகோல்
உன் தந்தையோ மை
.நீயோ காகிதம்

மை இன்றி எழுதுகோல் இல்லை

எழுதுகோல் இன்றி காகிதம் பயனில்லை.

புரிந்தேன் மனம் தெளிந்தேன் என்று

தாயே என்று தழுவி கொண்டாள்
என்னை என் குட்டி தேவதை !!!!






என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (18-Sep-13, 6:34 pm)
Tanglish : pudirana kelvi
பார்வை : 119

மேலே