சில்லென்ற ஓர் உணர்வு.....

சில்லென்ற ஓர் உணர்வு.....
சட சடவென்று பெய்யும் மழையில்,,,
சிலுசிலுவென்று அடிக்கும் காற்றில்,,,
குடுகுடுவென்று ஓடி முழுக்க நனைந்தேன்..
விடுவிடுவென்று பின்னால் வந்த அம்மா,,
தரதரவென்று உள்ளே இழுத்து சென்றார்கள்...
கதறக் கதற வெந்நீரில் குளிப்பாட்டி,
கம கமவென்று சாம்பிராணி புகைபோட்டு
கருகருவென்ற நீண்ட கூந்தலை காயவைத்து,
சுடசுட காப்பி கலக்கி கொடுத்தார்கள்....
சிடுசிடுவென்ற கோபத்துடன் உட்கார்ந்த என்னை
மெதுமெதுவாக அணைத்தப்படி கொஞ்சினார்கள்..
அம்மா என் கண்ணம்மா என்ற அம்மாவின் அன்பில்
சில்லென்று ஆகிய மனதுடன் சிறிய குழந்தையாய்
கலகலவென்று சிரித்தப்படி தாயின் மடியில் சாய்ந்தேன்.
*****************............................****************