எப்போது ?

காலைப் பொழுது புலர்ந்து
பனி மூட்டங்கள்
சின்ன சின்ன முக்காடு போட்டு

அன்னார்ந்த்து பார்க்கும்
அகன்ற மலைகளையும்
வானோடு மேகம் சேர்த்துவிட

சூரியனைக் காண
நாணத்தோடு காத்திருக்கும்
பூமி நங்கை போல

காளையர்கள் கேட்கும்
சீதன சில்லரைகளால்
சிதறு தேங்காயாய் சிதறுண்டு
காலம் கடத்தும்
கன்னியரின் வாழ்வு புலரும்
காலம்தான் எப்போது ?

எழுதியவர் : பிரகாசக்கவி — (19-Sep-13, 10:30 pm)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே