என் நிலை என்ன ???

பரபரப்பான இந்த உலகத்தில்
படிப்பிற்கேற்ற வேலை தேடி அலைகின்றனர்.
விடையோ
வேலையில்லா திண்டாட்டம் என்றது .
இருந்தும் நான் வேலைக்கு செல்கிறேன்
இந்த சிறு வயதிலும் கூட
பட்டங்களும் வாங்கவில்லை.,
மாலையில் பட்டம் விடும் சூழலும் இல்லை.
நானும் என் நண்பனும்--காலையில்
அவசர அவசரமாய் கிளம்பினோம் ...,,,
அவன் புத்தகப்பையை சுமக்க
நானும் சோற்றுப்பையை தூக்க,,,
ஒருசேர சென்றோம் பள்ளிக்கு.
மணி அடித்ததும்
அவன் சென்றான் பாடம் கற்க
முதலாளியின் சத்தம் கேட்டதும்
வேகமாய் சென்றேன் --நான் சிமென்ட் தட்டுடன் நிற்க...
அந்த பள்ளியின் கட்டட வேலைக்கு ...
தகுதியின் அடிப்படையில் அல்ல
என் வீட்டின் அடுப்படிக்காக .....
இந்த மலர்களும் வாழட்டும் ...
உங்களின் பகிர்வு மற்றவருக்கு விழிப்புணர்வாக அமையட்டும் ...
# குமார்ஸ் ......