துடித்தெழும் புல்.

உரிமைமறுக் கப்பட்ட நாட்டில்
உடமையழிக் கப்பட்டு ரோட்டில்
==திரியவிட்ட மக்கள்தமை
==திரும்பிப்பா ராதிருந்த
நரிக்கூட்டத் திற்கிடவோ வோட்டு?

குடிசையழித் தவிடத்தில் தங்கள்
கோபுரங்கள் நாட்டியவர் எங்கள்
==படித்தவர்கள் புத்திதனை
==பைத்தியத்திற்க் கிணையாக்கி
நடிப்பதற்கு வோட்டிடிடவோ நாங்கள் ?

அபிவிருத்தி என்கின்றப் பேரில்
அடிக்கின்றார் கொல்ளையது ஊரில்
==சபிக்கப்பட் டஇனமாய்
==சமைக்கப்பட் டநாமவர்
சுபிட்சமுற வேற்றலாமோ தேரில்?

அணுஅணுவாய் சந்ததிகள் கொல்லும்
அநியாயக் காரர்களை வெல்லும்
==நுணுக்கமென நம்வாக்கை
==நூதனமாய் அளிப்பதில்தான்
துணுக்குற்று துடித்தெழுமெம் புல்லும்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Sep-13, 3:36 am)
பார்வை : 74

மேலே