மழை நீரை சேகரிப்போம். . .

மேகத்தாயின் பிரசவத்தில் பிறந்த
குட்டி குழந்தை நான். . .

குளங்களும், குட்டிகளும் நான் குதித்து விளையாடும் தொட்டில்கள்...
முதல் முதலில் மர இலைக்கு
நீர் தந்த மகான் நான்...

மீன்களும், தவளைகளும்
என்மீது நித்திரை கொண்டன...
காடுகளும், கழனிகளும்
என்னால் பசுமை பெற்றன. .

என்மீது ஆசைக் குழந்தையின்
கனவு கப்பல்கள் சவாரி செய்தன..

மீண்டும் வந்தால்
மனிதனின் வியர்வையில் நனைந்திட ஆசை,
பயிர்களின் வேர்களில் பதுங்கிட ஆசை..,

பூமியை அதிக நேரம் முத்தமிட்டவன் என்ற உரிமையல் கேட்கிறேன்.

யோசித்து பார்!!!!

உனது தாகத்தை தீர்க்க வந்தவன் நான்
சமுத்திரத்தில் கலந்தால் திரும்ப வர
சாத்தியம் இல்லை..

என்னை வைத்து குளங்களையும், குட்டைகளையும் நிரப்புங்கள் போனால் வரமாட்டேன்.

என்னை வீனாகாதீர். . . .

எழுதியவர் : vinothkrish (20-Sep-13, 8:55 pm)
சேர்த்தது : vinothkrish87
பார்வை : 115

மேலே