கடலம்மா!

ஏ கடலம்மா!
உன்னை எங்கிருந்து பார்த்தாலும்
அழகு தான்!

அழகு ஆபத்து என்பது
இது தானோ!
அதனால் தான்
சுனாமி என்ற பெயரால்
சுருட்டிவிட்டாயோ!

எத்தனை எத்தனை பிஞ்சுள்ளங்கள்!
புதுவாழ்வில் அடியெடுத்து வைத்த
எத்தனை புது ஜோடிகள்!
எத்தனை எத்தனை உயிர்கள்! அப்பப்பா!

நினைக்கவே நெஞ்சு கனக்கிறதே!
அப்படியும் உன் ஆசை அடங்கவில்லையா!

உன்னையே நம்பி கடலுக்குள் வரும்
எம்மீனவ நண்பர்கள்
அடிக்கடி தொலைவதன் காரணம் என்னவோ!
அவர்களுக்கு நீதானே கடல்தாய்!

தாய் ஒரு பிள்ளையை
கரை சேர்ப்பாளே தவிர‌
எக்காரணத்தைக் கொண்டும்
கைவிடுவதில்லையே!
ஏனம்மா!
அப்பப்ப ஆக்ரோஷமாகிறாய்!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (20-Sep-13, 8:13 pm)
பார்வை : 88

மேலே