ஆறில் பத்து போகுமா?

உங்க வீட்ல தினமும் மனைவி சமையல்தானா?"
-
"எப்படி டாக்டர் கரெக்டா கண்டுபிடிச்சீங்க...?"
-
"தினம் தினம் செத்துப் பிழைக்கிறேன்னு
நீங்கதானே சொன்னீங்க...!"
-
----------------------------------------
-
முகலாயரின் ஆட்சி எதில் இருந்து எது வரை
இருந்தது ?
-
"26 ம் பக்கதில் இருந்து 31 அம் பக்கம் வரை
இருந்தது சார்...!
-
-----------------------------------------
."ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் உங்க
கணவர் பிழைப்பார்..."
-
"அப்படின்னா, நானும் என் மாமியாரும்
ராசியாகிட்டோம்னு அவர்கிட்ட சொல்லிப்
பாருங்க டாக்டர்..!"
-
------------------------------------
-
ஆசிரியர் : மாலா, ஆறில் பத்து போகுமா?
-
மாலா : போகும் சார்!
-
ஆசிரியர் : எப்படி?
-
மாலா : எங்க வீடு ஆத்துக்குப் பக்கத்திலேதான்
சார் இருக்கு. எங்கம்மா தினமும், பத்துப்
பாத்திரத்தை அங்கே தான் தேய்ப்பாங்க.
-
------------------------------------
-
டீச்சர் : உங்க பையன் பெரிய மிலிட்டரி
மேனா வருவான்
-
அம்மா : எப்படிச் சொல்றீங்க...
-
டீச்சர் : எல்லா சப்ஜக்ட்லயும் பார்டர்லயே
பாஸ் பண்றான் !!!
-
=============================
(படித்ததில்பிடித்தது)

எழுதியவர் : கே இனியவன் (20-Sep-13, 9:56 pm)
பார்வை : 127

புதிய படைப்புகள்

மேலே