சென்ரியு (ஹைக்கூ)
நரம்பில்லாமல்
பேசுகிறது
வானொலி
++++++
முடி கொட்டுவது
வலிக்கிறது
மனதிற்கு
++++++
வெட்கப்படும் பெண்ணாய்
வீட்டிற்குள்ளேயே இருக்கிறது
ஆமை
++++++
இனிப்பு சாப்பிட்ட
ஆண்கள் கர்ப்பம்.
வயிற்றில் புழுப் பூச்சி
++++++
காகிதம்.
மரத்தின்
ஆவி
++++++
அவள் அழைக்கும் பொழுது
நடுக்கத்துடன்
நானும் எனது கைப்பேசியும்
++++++
கதறி - அழுதன
முட்டிக்கொண்ட
மேகங்கள்
++++++
வெட்டுவதும்
தைப்பதுமாக
மருத்துவர்
++++++