நடைபிணம் .
கிளிஞ்சல் மேகம்
கிளியே நீயும் நானும்
பௌர்ணமி தேசத்து
பால்நிலவு நீதானென்று
உன்னில் பைத்தியமாய் நான் .......!
என்மீது நான்மோதியே
என் விம்பம் உடைந்து போனதும்
அது
இது
உதுவென்று
ஆயிரம் ஆயிரம் அதிசயங்கள்
இன்னும் என்னுள் .......!
மகுடி இசையில்
மெய்மறந்தாடும் பாம்புகள் போல
என் மனதின் ஆழங்களில் .
நீ
திருமண சந்தையில்
விலையாகி போனபின்னும்.......!