காதலித்து பழகு
அதிகாலையில் எழ
அலாரம் வைத்து
அதற்கு முன் எழுந்து
அலாரத்தை எழுபுவோமே
அதற்காகவவேனும்
சோப்பு கரைய கரைய
தேய்த்து தேய்த்து
குளித்து கலரை ஆக
முயற்சிப்போமே அதற்காகவேனும்
கண்ணாடி முன் நின்று நின்று
பல ஒத்திகைகள் பார்த்து பார்த்து
கடைசியாய் அவனையோ அவளையோ
பார்த்ததும் சொதப்புவேமே
அதற்காகவேனும்
தலை முடி சீவி சீவி
சீப்பிற்கே பெரும் மூச்சு
வரும் வரை
தன் சிகை அலங்காரம் செய்து
கடைசியில் காற்றினில்
பறக்க விடுவோமே அதற்காகவேனும்
அவனோ அவளோ வருவாள் என்று
காத்திருந்து காத்திருந்து
கடிகார முட்களை எல்லாம்
கண்ட படி திட்டி தீர்போமே
அதற்காகவேனும்
நடை மாறி உடை மாறி
பாவனை மாறி
இப்படி பல மாற்றங்கள்
நமக்குள் மாறி
புதிதாய் மீண்டும் பிறப்போமே
அதற்காகவேனும்
ஆயிரம் முகங்களை கடந்தும்
அந்த ஒரு முகத்திற்காக
ஏங்கி தவிப்போமே
அதற்காகவேனும்
அழுததுண்டு சிரித்ததுண்டு
கோபட்டதுண்டு
வெட்கப்பட பழக வேண்டுமே
அதற்காகவேனும்
துன்பத்தில் ஒரு இன்பமும்
இன்பத்தில் ஒரு துன்பமும்
கண்டுகொள்ள வேண்டுமே
அதற்காகவேனும்
காதலித்து பழகு
காதலும் ஒரு கலையே

