பந்திக்கு முன்னே படைக்கு பின்னே..
பந்திக்கு முன்னே படைக்கு பின்னே..
இந்த பழமொழிக்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன..எங்காவது விருந்து,அன்னதானம் நடந்தால் அங்கு முதல் பந்தியில் அமர வேண்டும். அப்போதுதான் எல்லா உணவு பதார்த்தங்களும் கிடைக்கும்.கடைசியாக சென்றால் முதல் பந்தியில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தீர்ந்து போயிருக்கும்.எனவே பந்திக்கு முந்தி செல்ல வேண்டும்.
போர் நிகழும்போது முன்னின்று சென்றால் உயிர் இழக்க நேரிடும்.போரில் பின்னுக்குசென்றால் ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.எனவே படைக்கு பிந்தி செல்ல வேண்டும். இவ்வாறு இப்போது பொருள் கொள்ளப்படுகிறது.
ஒரு விருந்து நடக்கும்போது மற்றவர்களை வரவேற்க வேண்டும். அதுவும் பந்தியில் முன்னின்று வரவேற்க வேண்டும். நாம் விருந்தோம்பல் பண்பை அங்கிருந்தே தொடங்கவேண்டும்.. இதுவே பந்திக்கு முந்தி செல்ல வேண்டும்.
படைக்கு பிந்து என்பது கோழை தனம் அல்ல. தாமதம், தரத்தை உயர்த்தும் எனக்கொண்டு தகுந்த திட்டத்தோடு, வியூகம் அமைத்து படைகளை திரட்டி செல்லும் பக்குவத்தை பெற வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும்.
"வினைவலியும் தன்வலியும் மற்றான் வலியும்
துணைவலியும் தூக்கி செயல்"
என்னும் வள்ளுவர் வாக்கும் இதனையே வலியுறுத்துகிறது.