காது கொடுங்கள்!
உங்கள் துணை உங்களிடம் ஏதோ ஒரு விசயத்தைப் பகிர்ந்து கொள்ள
வரும்போது நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் (உதாரணத்துக்கு பேப்பர் படிப்பது டி.வி பார்ப்பது சமைப்பது) உடனே அதைத் தற்காலியமாக நிறுத்திவிட்டு அவர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்!
இதெல்லாம் ஒரு விஷயமா? இத போய் ஏன் பெரிசு படுத்தணும் என்று உங்கள் துணையின் பிரச்சனையின் தீவிரத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.
அதற்குத்தான் அப்பவே சொன்னேன். எல்லாத்துக்கும் நீதான் காரணம். நான் சொன்னபடி கேட்டிருக்கணும் எனத் துணையின் தலையில் குட்டி தீர்வு சொல்லாதீர்கள்.
துணையின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள். எங்க அம்மா சொன்னதால உனக்கு வருத்தமாயிடுச்சா? எங்க அப்பா திட்டினாதால மனசு கஷ்டப்பட்டியா? என அக்கரையாக விசாரியுங்கள்.
பிரச்சனையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிற உங்கள் துணையிடம் அது தொடர்பான நேர்மையான கேள்விகளை அக்கரையாக கேளுங்கள். அதைத்தவிர்த்து கிண்டலாக கேலியாக விசாரிக்காதீர்கள்.
உங்கள் துணையின் பிரச்சனை உங்களுக்கு நடந்திருந்தால் எப்படி உணர்வீர்களோ அதே மன நிலையுடன் அன்பாக அணுகுங்கள்.
இப்ப என்ன ஆயிடுச்சு நான் இருக்கேன்ல.. எதுவானாலும் பார்த்துக்கலாம் என முழுமனதுடன் ஆதரவு கொடுங்கள்.