ஈழத் தமிழச்சியின் புலம்பல்

தாலாட்டு கேட்டு

கண்மூடிய குழந்தைகள்

இன்று -  பீரங்கிகள் பாடும்

தாலாட்டில் உயிர்மூடின ..                                   

 

தொப்புள் கொடியருக்கா

என் குழந்தைகளுக்கு

தொட்டில் கொடியன்று

வெட்டில்கொடி காட்டினர்....                  

 

தனிமைகண்டு பயந்தமக்கள்

உறவை கண்டு பயந்தனர்           

எங்கு இருக்கும் அவ்வொருஉறவும்

பிரிந்து விடுமோ என்று !                                 

 

குழந்தையின் பல்பட்டு

காயம்கொண்ட மார்பகங்கள்

இன்று  தோட்டாக்கள்

கடித்து  காயம் கொண்டன        !          

 

கொத்து குண்டுகள் வீசி

கொன்று குவித்தனர்             

உடலை வதைத்தனர்         

சிலரோ அதையும் ரசித்தனர்   !                

 

உறவுகள் என்று

சொல்லிக்கொள்பவர்கள்                      

இமயத்தினின்று

சிரிக்கின்றனர் இன்றும் !

எழுதியவர் : மைதிலிசோபா (26-Sep-13, 8:03 pm)
பார்வை : 135

மேலே