பரிசு....

பயன் கருதாப் பணிகள் ஆற்றுபவன்
பாதங்களை நோக்கி பாராட்டே பாதையாகும்...

விருதுகளே வீதியாகும்
பரிசுகளே பந்தலாகும்..
வாழ்த்துக்களே பன்னீர் தெளிப்பாகும்..

பங்கு பெறுதல் வளர்ச்சி
பரிசு பெறுதல் மகிழ்ச்சி...

முன்னேற்ற முகடுக்கு இரு பாதைகள்
ஊக்குவிப்பும் முனைப்பூக்கமும்... ..

என் தோழன் அகரமுதல்வன் இரு பரிசுகள் ஒரு விருது பெற்றுள்ளான்...வாழ்த்துகிறேன்...

என் குரு கவிஜி சிறந்த சிறுக(வி)தை பரிசுக்குரிய '(வி)சாவி' பெற்றமைக்கு வாழ்த்துகிறேன்...

புது தோழர் க.ஷர்மா வாழ்த்து பெறுகிறார்...

வாழ்க...வளர்க...

எழுதியவர் : அகன் (28-Sep-13, 9:41 am)
பார்வை : 102

மேலே