எறும்பின் பேச்சு

வரிசையாக செல்வேன்...

வழியில் இனிப்பை கண்டால் சுவைப்பேன்..!

கூட்டமாக இருப்பேன்... இனிப்பு இருந்தால் என்

கூட்டாளிகளோடு வருவேன்..!

சலசலப்பு இல்லாமல் உன் உடம்பில் ஏறுவேன்...

சர்க்கரை பார்த்தாலே நான் மகிழ்ச்சி அடைவேன்..!

கோபம் வந்தால் கடித்துவிடுவேன்...

கொடிய மருந்தால் நீ என்னை அழித்துவிடுகிறாய்..!

எனக்கும் குடும்பம் இருக்கிறது...

எறும்பானாலும் எதிர்க்கும் நெஞ்சம் இருக்கிறது..!

தண்ணீரில் விழுந்தால் தத்தளிப்பேன்...

தரையில் வர முயற்சி எடுப்பேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (28-Sep-13, 2:44 pm)
பார்வை : 86

மேலே