சொல்லாட்டம்-கேஎஸ்கலை

திண்டாடுகிறார்கள் வாழும் வழித்தெரியாமல்
தனமும், ஈனத்தனமும் கருக்கொண்ட அரசியலில்
கொண்டாடுகிறார்கள் மக்களின் வலிதெரியாமல் !
✍✍✍
சீதனத்தால் செழித்தது பொருளாதாரம்
தீர்ந்தபின்னே நச்சரிப்பான் கணவன் தினமும்
ஆடவனே உனக்கென்ன “பொருளா” தாரம் ?
✍✍✍
அரிதார வார்த்தைளால் அக்கறை
அரசியல்குள முதலைகளின் வாயில் தினமும்
ஜெய்த்தபின் வெளுத்திடும் அக் “கறை” !
✍✍✍
குடிசையெங்கும் வறுமையின் வாயில்கள்
குழந்தைக்கு உணவின்றி அழுவாள் மனைவி
இருந்தாலும் புருசனுக்கு வாயில் ”கள்”!
✍✍✍
ஏழைகளின் கண்ணீருக்கும் வேர்வைக்கும்
இங்கு காரணம்-விலைவீழ்ச்சியும் மழைவீழ்ச்சியும்
இவர்வாழ்வில் நிம்மதிஎப்போ “வேர்”வைக்கும் ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (28-Sep-13, 6:56 pm)
பார்வை : 275

மேலே