மனிதன் தீட்டா...?கடவுள் தீட்டா...? 555
தோழா...
உன் அன்னையின் வயிற்றில்
நீயும் பத்து மாதம்...
என் அன்னையின் வயிற்றில்
நானும் பத்து மாதம்...
நீ உதித்த
அதே கிராமத்தில் தான்...
நானும் உதித்தேன்...
நீ செல்லும் பாடக
சாலைக்குதான்...
நானும் செல்கிறேன்...
நீ காகித பென்சில் வாங்கும்
அதே பெட்டி கடியில் தான்...
நானும் காகித பென்சில்
வாங்குகிறேன்...
நீயும் நானும்
அருகருகேதான் அமர்கிறோம்
ஒரே மேசையில்...
நான் வாங்கும்
சத்துணவுதான்...
நீயும் வாங்குகிறாய்...
நான் தினமும்
காலையில்...
ஊற வைத்த சாப்பாடுதான்
உண்டு வருகிறேன்...
நீயும் தினமும் ஊற வைத்த
சாப்பாடுதான் உண்டு வருகிறாய்...
உன் வீட்டிலும்
விறகு அடுப்புதான்...
என் வீட்டிலும்
விறகு அடுப்புதான்...
உன் வீடும் ஓலை
வீடுதான்...
என் வீடும் ஓலை
வீடுதான்...
நான் தினம் குளிக்கும் நம்ம
ஊர் குளத்தில் தான்...
நீயும் தினம்
குளிக்கிறாய்...
நான் தண்ணீர் எடுக்க
எடுத்து செல்வது...
மண் பானைதான்...
நீ தண்ணீர் எடுக்க
எடுத்து செல்வதும்...
மண் பானைதான்...
நான் தண்ணீர் எடுக்கும்
அதே நீர் தேக்கத்தில் தான்...
நீயும் தண்ணீர்
எடுக்கிறாய்...
பள்ளிக்கு நான் இலவச
உடைதான் அணிந்து வருகிறேன்...
நீயும் இலவச உடைதான்
அணிந்து வருகிறாய்...
என் தோல் மீது நீ
கைபோடுகிறாய்...
நானும் உன் தோல் மீதுதான்
கை போடுகிறேன்...
கைகோர்த்து
நடக்கிறோம் ஒன்றாக...
நீயும் நானும் சேர்ந்துதான்
அவர்கள் அழகு என்றோம்...
பேருந்தில் ஒன்றாகவே
பயணித்தோம்...
உன் கை தவறியபோது
என் கை கொடுத்தேன்...
என் கை தவறியபோது
உன் கை கொடுத்தாய்...
கோவிலுக்கு நான் பிரித்த
பூசெடியில்தான்...
நீயும் பூ பரிகிறாய்
கோவிலுக்கு...
நான் வணங்கும்
கடவுளைதான்...
நீயும் வணங்குகிறாய்...
தினம் நீ செல்லும்
கோவிலுக்குதான்...
தினம்
நானும் வருகிறேன்...
நீ உள்ளே சென்று
வணங்குகிறாய்...
நான் வெளியே நின்று
வணங்குகிறேன்...
நான் உள்ளே வர
மட்டும் கூடாதா...
நான் உள்ளே வந்தால்
நான் தீட்டா...?
இல்லை நீ தீட்டா...?
இல்லை சாமி தீட்டா...?
மனிதன் தீட்டா...?
கடவுள் தீட்டா...?
யார் தீட்டு தோழா.....!