தூங்காதே தம்பி தூங்காதே...
இதயத்தில்
தூக்கம் கொண்டால்
காதலில் துக்கம் வந்துவிடும்...
கல்வியில்
தூக்கம் கொண்டால்
தேர்வில் துக்கம் வந்துவிடும்...
வணிகத்தில்
தூக்கம் கொண்டால்
முதலுக்கு துக்கம் வந்துவிடும்...
அணைகளை திறப்பதில்
தூக்கம் கொண்டால்
அறுவடைத் துக்கம் வந்துவிடும்...
தேர்தலில்
தூக்கம் கொண்டால்
வாழ்க்கையில் துக்கம் வந்துவிடும்...
மருத்துவத்
தூக்கம் கொண்டால்
மரணத்தின் துக்கம் வந்துவிடும்...
விழிப்புணர்வு
கொள்ளாவிட்டால்
விடியலில் துக்கம் வந்துவிடும்...!