பசி

பசியின் மிகுதி
நடைபாதை உணவகம்...
பதார்த்தம் வாங்கித் திரும்புகையில்...
யாதார்த்தமாய் பட்டது
ஒரு காட்சி...

குப்பைத் தொட்டி...

எச்சில் இலையில்
மிச்சம் தின்னும் மாடும்...
அதைத் தட்டிப் பறிக்.கும்
தெரு நாய்களும் - அதில்
தெரித்த உணவை.....
காக்கைக் கூட்டமும் உண்ண...

வாடிய வதனமும்
ஒட்டிய வயிறுமாய்
தன் வாய்ப்புக்காய் காத்து நின்றான்
சிறுவன் ஒருவன்...

கிளறிப் பார்த்தும் கிடைக்கவில்லை
கெட்டுப்போன பண்டம் கூட...
கிரக்கமாய் கண்கள் சொருகிட...
அழவும் ஆரம்பித்தான் வேதனையில்...

கலங்கிய கண்களோடு...
அவனருகில் சென்றேன்
வாஞ்சையாய் தலைதடவி...
கையில் வைத்தேன் உணவை...

புன்னகையில் நன்றி சொல்லி
பிரித்து உண்கையில்...
ஆவலாய் ஒரு நாய்க்குட்டி
வாலாட்டி அவனைப் பார்க்க...
தன் உணவைப் பகிர்ந்தான் அச்சிறுவன்...

இரு உயிர்களின் பசிதீர...
என் பசி மறந்தே...
என் வழி நடந்தேன்...!

எழுதியவர் : ராஜதுரைமணிமேகலை (29-Sep-13, 9:50 am)
Tanglish : pasi
பார்வை : 116

மேலே