பிறந்த நாள் வாழ்த்து ....!!
முன் பிறவி தவமாய்
என் வரமான சிநேகிதியே !
உன் நட்பு நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் ....!!
அலைபேசியில் அளவளாவி
அகம் மகிழந்திருப்போம் ...!
மனக்குறை பகிர்ந்து
மனச்சுமை இறக்கிடுவோம் ...!!
அன்பில் அன்னை நீ !
பண்பில் சிறந்தவள் நீ !
நட்பின் சிகரம் நீ !
மொத்தத்தில் வள்ளல் நீ ....!!
இல்லை என்போர்க்கு இரக்கமுடன்
இல்லை யெனாமல் கொடுத்திடுவாய் ...!
இல்லம் சென்று முதியோருடன்
இதமாய்ப் பேசி மகிழ்ந்திடுவாய் ....!!
வாடி நிற்போர் வாட்டமறிந்து
வேதனைதீர வழி வகுப்பாய் !
தேடித் பார்த்தாலும் உன்னைப்போல
தோழி எனக்கு கிடைப்பாரோ ....??
உதவி செய்வதில் உன்னைப்போல
உண்மையில் ஒருவரைக் கண்டதில்லை !
உயர்ந்து நின்றாய் என்நினைவில்
உள்ளம் முழுதும் நிறைந்திருப்பாய் ....!!
மண்ணில் பூத்த நம்நட்பு
விண்ணில் முழுமதியாய் ஒளிரட்டும் !
வெண்தாமரை போலும் தூயநட்பை
கண்போல் போற்றி காத்திடுவோம் ....!!
பிறவி பலநான் எடுத்தாலும்
பிரிய தோழி நீயாவாய் !
பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் !
பிரியா வரமதை வேண்டுகிறேன் ....!!
பாவையருள் பண்பானவளே ....!
பாரதி என்ற சரஸ்வதியே ....!!
பார்போற்ற வாழ்வாய் நலமுடனே ...!
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே .....!!!