+என் இதயம் சென்று விட்டதடி+
வாயேஜர் ஒன்று
என்ற விண்கலம்
மனிதர்களால் உருவாக்கப்பட்டதிலேயே
சூரிய மண்டலத்தை தாண்டிச்சென்ற
முதல் பொருள் என்ற
செய்தி ஒன்று கண்டேனடி!
அது கடந்து சென்ற
தூரத்தையும் தாண்டி
என் இதயம் சென்று விட்டதடி
நீயுரைத்த வார்த்தைகளால்....
இவ்வளவு சக்தி உள்ளவள் என்று
உன் பெயர் அல்லவா
செய்தியில் வந்திருக்க வேண்டும்..
என்ன உலகமோ...!
தப்பு தப்பாக செய்திகளை தந்துகொண்டு...