+இதயம் உதிர் காலம்!+

இலையிதிரும் காலத்தில்
இலை உதிரக் கண்டதுண்டு!

மழையுதிர் காலம் என‌
ஒன்று உண்டெனக்கொண்டாலும்
மழை உதிரக் கண்டதுண்டு!

இது என்ன
இதயம் உதிர் காலமா?
என் இதயத்தை
உதிர்த்துவிட்டு சென்றுவிட்டாயே!

இன்று
உலக இதய நாளியே
என்னிதயம் விட்டுவிட்டு
இதயத்தைப் பற்றி பேச‌
எவ்விடம் நீ சென்றாயோ?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Sep-13, 11:15 pm)
பார்வை : 127

மேலே