தமிழினி மெல்லச் சாகும் -( அஹமது அலி )

தமிழ்மெல்லச் சாகுமாம் உலகினில் என்று
::::தந்ததாம் ஐநாஓர் அறிக்கையை அன்று
தமிழ்வாழும் நெஞ்சினிலே இச்செய்தி வேகும்
::::தன்மானம் இல்லார்க்கு காற்றோடு போகும்
---------------------------------------------------------------------
தமிழனா இவன் இதுகேட்டு நோக
::::தனக்கு இரவல்மொழி யுண்டே மேலே போக
தவறென்ன பிறமொழிக் கலப்பாலே என்பான்
::::தமிழினப் பங்கென்றால் முந்திப் போய் தின்பான்
--------------------------------------------------------------------------
தாய்போன்ற தமிழுக்கு கேடெனக் கண்டு
::::தனக்கென்ன என்பவன் தமிழனோ இங்கு
தாய்சாகக் கிடந்தாலும் தான்மட்டும் உண்டு
::::தன்னலம் பேணுவோன் வாழ்வானோ நன்று
-----------------------------------------------------------------------
தமிழ்வாழ முடியுமா? இதுபுதுத் தலைப்பு
::::தமிழ்ப்பட்டி மன்றத்தில் இனிக்கல கலப்பு
தமிழ்வாழும் திண்ணமாய் என்போர்க்கும் மறுப்பு
::::தமிழனே சொன்னாலும் சொல்லுவான் தீர்ப்பு
-----------------------------------------------------------------------