பக்தி அந்தாதி(மீள் பதிவு )

பிறந்து வளர்ந்து பயில வேண்டும் கல்வி
சிறந்து நின் வழி பெற வேண்டும் -நிறந்து
மெஞ்ஞானம் கண்டு வானோர் போற்ற
எஞ்ஞானம் வென் (று) இடர்.!

இடர் களையவே ணும் யாருக்கிரங் காகிலும்
படர் நெறி போற்றிமகிழ வே ணும் -சுட ருருவில்
என்பர் சான்றோர் பெரு மனார்க்
காண்பர் என்நெஞ் சவர்க்கு ..!

அவர்க்கே எத்திசையும் ஆள் வொமென்றும்
அவர்க்கே அன்போ டும்ஆள் வோம் -யவனன்றி
மாலை சூட நாளும வர்கல்லால் மற்றெவர்க்(கு)
ஆளா வோம் எந்நாளும் ஆள் ..!

ஆளாகி யும் அல்ல லுற்றும் பெற்றே யாம்
கேளா துனன்றுரை கேளாமல் -நீளாகம்
செம் மையனாகி யும்முகத்தான் மும் முறையும்
எம்மான் கொண்டே யறிவான்.!

அறி வானே அவனுந் தான் அறிந் தானே
அறி வில்லறிவான் தானே அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே ஒளிர்வான் ஆகாசம்
அப்பொரு ளுந்தானே அறி ..!

எழுதியவர் : தயா (30-Sep-13, 9:40 am)
Tanglish : pakthi anthathi
பார்வை : 112

மேலே