@@@அன்றும் இன்றும் @@@
செவ்வானம் வெளுத்திட
சில்லென்ற தென்றல் வருடிட
பெண்ணிவள் சிட்டாக எழுந்துவந்திட
சாணமொழுகி கோலமிட்டு
விறகடுப்பில் விறுவிறுப்பாய்
தயாராகிடும் விருந்து -அன்று
அலாரத்தின் மணியோசையில்
அவசரமாய் வாரியெழுந்து
காபிஇயந்திரத்தில் காபியினை
அவசரமாய் குடித்துவிட்டு
மின்அலைஅடுப்பில் பர்க்கரில்
முடிந்துவிடும் காலைஉணவு - இன்று
அன்பான நண்பர்களுடன்
அளாவலாவி சிங்கார
நடைநடந்து சீராக பள்ளிச்சென்று
ஆசிரியரின் சொல்கேட்டு
வட்டம்கட்டி பகிர்ந்துண்டு
விளையாடியது வரண்டாவில் -அன்று
மூட்டையோடு மூட்டையாக
திணிக்கப்பட்ட வாகனத்தில்
மூச்சுவிட்டு முதுகுசுமையுடன்
மனசுமையோடு பள்ளிசென்று
துக்கமும் தூக்கமுமாய்
பாடம் படிக்குது கணினியில் - இன்று
விடுமுறை நாட்களில்
காலாற வரப்போடும்
வயலோடும் விளையாடி
கபடியும் கம்புச்சன்டையோடும்
ஆற்றில் முக்குளிப்போட்டு
ஆற எண்ணெய்குளியல் -அன்று
வீட்டின் தொலைக்காட்சியில்
வீடியோவின் உள்சென்று
வேடிக்கை கேளிக்கை கண்டு
பயிர்ச்சி வகுப்புகளுக்கு
விரும்பாமல் சென்றுவந்து
பணத்திற்கு வீண் செலவு -இன்று
குடும்பத்தோடு ஒன்றுசூழ்ந்து
சம்மணமிட்டு -வாழை இலை
விரித்து காய்கறியோடு
அறுசுவையும் பொங்க
ஆரோக்கியமான உணவோடு
அழகாகநடக்கும் விருந்தோம்பல் -அன்று
அவரவர் பசியெடுக்க
அவசர அடுப்பை ஆன் செய்து
அவரவர் விரும்ப அரைகுறையாய்
கணினியில் ஒருகையும்
மறுப்பக்கம் கரண்டியில்
உணவோடு மறுகைய்யும்-இன்று
ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லுமாய்
தண்ணிஇறைத்து விறகெடுத்து
குனிந்து நிமிர்ந்து பெண்களும்
ஏர்பிடித்து ஏற்றம் இறைத்து
விடியலில் விதை தெளித்து
ஆண்களும் ஆரோக்கிய வாழ்வு -அன்று
நவீன எந்திரமாம்
மின்அடுப்பும் மின்அரவையும்
மொத்தமும் இயந்திரமாய்
உண்ணுவதற்கும் குனியாத
நிலையிலே ஆணும் பெண்ணும்
வீட்டிலும் வெளியிலும் -இன்று
தாத்தாபாட்டி கதை சொல்ல
அம்மா அப்பா கேள்விகேட்க்க
முற்றத்திலும் மாடியிலும்
அண்ணார்ந்து நட்சத்திரம் பார்க்க
அன்போடு நிலாச்சோறுண்டு
பாசத்தோடு கண்ணுறக்கம் - அன்று
கைப்பேசியின் கொஞ்சலிலும்
தொலைக்காட்சியின் ஒலியிலும்
கணினியின் அரட்டையிலும்
அவரவர் அறையில்
ஆளுக்கொரு மூலையில்
அரைகுறை உறக்கம் -இன்று
நவீனயுகத்தில் மகிழ்ச்சியோடு
மாசுக்கள் சூழ வாழ்ந்தாலும்
மனிதம் ஓங்கி தீயவை தீர்ந்து
அன்பும் பாசமும் பொங்க மக்கள்
சமமாய் கூடி வாழும் நாளும்
வாராதொவென்று நானுமிங்கு .
...கவியாழினி...