மரணம்

எவளென்று தெரியாத‌
அழகொன்று கண்டாலே
அலைக்கழியும் கால்களுக்கு
இரும்புச் சங்கிலியிட்ட சகுனி
யார்???

எட்டாத உயரத்து
எதிர் வீட்டு மாங்கனிக்கு
கல் வீசும் கை ரெண்டை
கரச் சேதம் செய்த கயவன்
யார்???

சித்திரைக்கு சிலம்பாட்டம்...
பொங்களுக்கு பொல்லாங்கு...
சினிமாவில் சீரழியும்
சீரான கண்ணிரண்டை
இருட்டரைக்குள் மூடி வைத்த‌
இனந்தெரியா பாவி
யார்???

ஓர் மூலையில் ஓர் சத்தம்...

அத்தனைக்கும் காரணம் நான்,
அச்சமின்றிக் கூறுகிறேன்,
"மரணம்" அது என் பெயர் தான்...

எனை எதிர்க்க மானிடரில்
எவரேனும் உள்ளனரோ???
ஏய் மனிதா உன் வாழ்க்கை
கூறுகிறேன் செவி கேள்...

பூமிக்குப் பதிலாக‌
புதைகுழி தான் உன் வீடு...
ஆடித்திரிந்தவனே!
ஆறடிக்குள் உன் பாடு...
அல்வா எடிசனுக்கும்
இருட்டறை தான் தாய் நாடு...

சிந்தனை செய் பாவலனே!!!

சீர் கெட்ட ஓர் வாழ்வை,
சீக்கிறமாய் முடிக்கிறாயா???

இல்லை,

சிறப்பாக நீ வாழ்ந்து,
மரணத்திலும் மகிழ்கிறாயா???

எழுதியவர் : ஹனாப் (30-Sep-13, 9:36 am)
பார்வை : 80

மேலே