இந்திய மொழியாக என் தாய் மொழி தமிழினை அறிவிப்பாயா...
அறிவிப்பாயா? அறிவிப்பாயா?
என் தாய் மொழி தமிழினை
இந்திய மொழியாக அறிவிப்பாயா?
எழுத்திற்கு வடிவம் தந்து
வடிவத்திற்கு ஓசை தந்து
ஓசைக்கு இனிமை தந்து
என்றும் முத்தமிழாய் விளங்கும்
என் தாய் மொழி தமிழினை அறிவிப்பாயா?
பல எளிய இலக்கணங்கலையும்,
கவிதைகளையும்,
கதைகளையும்,
புராணத்தையும்,
இதிகாசங்களையும் தனக்குள்ளே படைத்து
சிறந்த மொழியாக விளங்கும்
என் தாய் மொழி தமிழினை அறிவிப்பாயா?
நம்மை ஆண்ட அந்நியமொழியோ
இன்று உலகை ஆளுகிறது
உலகை ஆண்ட இம்மொழியோ
என் தாய் மொழியின் சிறப்பை உணர்ந்ததது
மொழிக்கே மொழி பெருமை சேர்த்தது என் தாய் மொழி தமிழ்
மலையாளம்,
கன்னடம்,
தெலுங்கு,
முதலிய மொழிக்கு தாய் விளங்கும்
என் மொழி தமிழினை அறிவிப்பாயா?
வேற்று மொழியோ கற்ப்பதருக்கு கடினம்
தமிழ் மொழியோ கற்பதற்கு
இனிமையான எளிய மொழி
தமிழனே! தமிழனே!
உறங்கியது போதும்
விழித்திரு!
எழுந்திரு!
பொங்கியெலு!
சுனாமியாய் கொதித்துஎலு!
உன் குரலுக்கு தான் வலிம்மை அதிகம்
இதை உலகம் உணர்ந்ததது
தமிழனே! உன்னால் முடியாது எதுவும் இல்லை
என்பதை நிருப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு
தமிழனே! பொருத்ததுப் போதும் பொங்கிஎழு
நம் உயிர் மூச்சாகிய தமிழினை
இந்திய மொழியாக அறிவிக்கச்செய்யப் பாடுபட்டிடு
தமிழனே! உன் உயிர் நீத்தேனும்
உன் தாய் மொழியை நீ! காத்திடு
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!!!