மலர் அந்தாதி ....!!!
மலரே மணப்பாய் பாவையர் கூந்தலில்
மகிழ்ந்து சிரிக்க இதழ்கள் விரிப்பாய் ....!!
விரிந்த இதழால் வண்டுகள் ஈர்ப்பாய்
மதுவுண்ட வண்டு முட்ட முறைப்பாய் ....!!
முறைப்பால் பயந்த வண்டும் ஒதுங்க
நாணத்தால் நீயும் இன்னும் சிவப்பாய் .....!!
சிவந்த நீயும் கவிஞன் கண்பட
கற்பனை முழுக்க நிறைவாய் கருவாய் ....!!
கருவாய் கவிதையில் உருவாய் ஆனாய்
பொலிவில் பாவையாய் அழகு பாமாலையாய் ....!!
பாமாலையால் பூரித்த உள்ளம் கண்டோம்
வாடினாலும் மணப்பாய் வாடா மலரே ....!!!