படைக்கொண்டு பாய்வோம் !

எடுப்பு(பல்லவி)

ஆடும் ஆடும் களமாடும்
சீறும் சீறும் புலிசீறும்
தீரும் தீரும் பகைதீரும்
கருவறுத்த வஞ்சகரை
விட்டிடுவோமா?
விடுதலை புலியெனும்
புயலாய் எழுகிறோம் பாரில்
தமிழ்மண்ணுக்கென மடிகிறோம்!
விடுதலை தீயில் எரியாவோம்!!

தொடுப்பு(சரணம்-1)

சீற்றம் அடக்கி
வெள்ளைக்கொடி ஏந்தி வந்தோம்
வந்தேறி கொடியவன் அந்நியரோடு
தாக்கி வந்தானே.....
அறவழி தாங்கி நின்றோம்
குரவளை நெரித்தான்
களமாடி செத்தோம்
மானத்தையே தின்றான்
ஏதிலியாய் திரிந்தோம்
கொத்துக்கொத்தாய் விழுங்கினான்
எம்மண்ணில் அடங்கி
ஒடுங்கி வீழவா பிறந்தோம்
தணலாய் எரிகின்றோம்
தமிழ் மண்ணுக்கென மடிகிறோம்...
விடுதலைதீயில் எரியாவோம்!
உதிரம் உதிர
தாய் நிலத்திற்கே விதையாவோம்!! (ஆடும் ஆடும் ...)

முடிப்பு(சரணம்-2)

புலியென எழுந்தோம்
பயமதை துறந்தோம்
வீட்டுக்கு ஒரு வீரன்
என்பது போய்
எவரும் வீரமென
பொடியரும் பெரியரும்
செருக்களமாடுவோம் சோர்ந்திடா
சோழ மண் காணுவோம்
பேதங்கள் விட்டு யாகங்கள் செய்கிறோம்
தீயில் கரியாகிறோம்
எம்மண் தொட்டவனை துண்டாக்குவோம்
புலிக்கொடி நாட்டுவோம்
புலியெனும் புயலாய்
வீசிடுவோம் மண்ணில்
மாவீர மலராய்
பூத்திடுவோம் தேசம்
காத்திட விழித்தேயிருப்போம்!! (ஆடும் ஆடும் ...)


நன்றி: புலிகளின் குரல் வானொலி

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (5-Jan-11, 11:17 am)
பார்வை : 355

மேலே