பிரபாகரன் பெயர் சொல்லும்
எடுப்பு(பல்லவி)
பிரபாகரன் பெயர் சொல்லும்
அவன் புலிவேங்கை என்பதனை
பூலோகமே அறியும்
அண்ணன் பெயர் சொல்லும்
உலகமாந்தர் சபையாவும்
திகைக்கும் அதில் புலிகளின்
குரலே தமிழாக ஒலிக்கும்
புலியான தமிழனை இந்தமண்
இனிகாணும் அது தமிழீழம்
தனி ஈழம் என்றே புலித்தமிழ்
பாயும் தமிழ்தேச புகழை பறைகொட்டும்
மண்ணெங்கும்
பிரபாகரன் பெயர் சொல்லும்
தொடுப்பு(சரணம்-1)
அண்ணன் படை களம்புகும்
அதில் எதிரியவன் கூட்டுச்சதி
சுக்கு நூறாக சிதறும் ...
வன்னிக்காட்டில் படையாவும்
புலிகளாய் திரியும்
அண்ணன் பெயர் சொல்லும்
வீறுகொண்டு எழும்படை
வேங்கைபடை அது எமை
கொன்றவனை திசைத்தேடி
தமிழ் மானம்காக்க
நெருப்பை எரிந்து தாக்கும்
அது கரும்புலிகள் அனல்தெறித்த
வீரத்தையே பேசும்
அலைகள் சீற்றம் கொண்ட
கடல்பரப்பில்
யாழ்ப்பாணமே வசிக்கும்
உப்புக்காற்றில் அலைமோதி
மணலிலும் நீரிலும்
கடற்புலிகளே எதிர் கொள்ளும்
கடல்தேசத்தின் அழகுதனை
வான்புலிகள் விண்ணுயர்த்தும்
கார்த்திகை பூக்கள்
பூத்த மாவீரர் துகில்கள்
போரிடவே ஏங்கி தவிக்கும்
அதில்
அண்ணன் தரும் விடுதலை
நெருப்பில் தமிழீழமே விடியும்
தமிழீழம் தாகம் தணியா
தாயக எழுச்சியை
புலிப்படையே எழுப்பும்
அதில் தமிழர் முகம்யாவும்
வானவில்லாய் நிறக்கும்
கருநாய்களின் கருங்காற்று புகையில்
கரியாகி போனோம்
அதில் நம்முறவின்
அடையாளம் நாமெங்கு கண்டோம்
அங்கு அதிகாரம் நாம் இழந்தோம்
அகதியாய் தானே வாழ்ந்தோம்
பின் புலியாலே நாம் உயிர்த்தோம்
முடிப்பு(சரணம்-2)
பிரபாகரன் பெயர் சொல்லும்
அவன் வென்ற புரட்சியை
வரலாறு எழுதும் அண்ணன்
அவன் தலைநிமர்ந்த நிமிர்வை
தமிழரின் நிமிர்வென்று
மக்கள் யாவரும் அறியும்
இந்த
தமிழ்ச்சாதி எவருக்கு பணியும்
எம்தாயக கனவு ஈழத்துக்கே தணியும்...