கரிசல் காடு..!!!!!

பனைமர
கடுகளுக்கிடையில்
பாம்புபோல்
நீண்டு ஓடுகிறது
ஒற்றையடி பாதை

காய்ந்து காற்றில் சலசலக்கும்
பனை ஓலையில்
குருவிகளின் கூடுகள் இல்லை

எங்கோ கூவும்
குயிலின் குரலில்
சோகம் இழையோடுகிறது

மேய்ச்சல் நிலத்தில்
மாடுகளும் இல்லை
ஆடுகளும் இல்லை
மேய்ப்பவனும் இல்லை
புல்லும் இல்லை

நெருப்பு துண்டுகளாய்
விரிந்து கிடக்கிறது
உழவு நிலங்கள்

உழுத நிலங்களின்
புழுதியை
நெருப்பு காற்று
முகத்தில் வாரி அடிக்கிறது

நீர்நிலைகளில்
நீர் இல்லை
பருத்த கழுகு
வானில் வட்டமிடுகிறது

கானல் நீரில்
குடிநீர் தேடுகிறார்கள்
கண்ணீருடன்...!!!

நீளமாய் விரிந்து கிடக்கிற வானில்
எதையோ தேடுகிறான்
புருவத்தின் மீது கை வைத்து
முகத்திலும்
வயிற்றிலும் சுருக்கம் விழுந்த
குடியானவன்

ஒன்று கூடும் மேகங்கள்
மயில், தோகை விரிப்பதர்குல்
எங்கோ களைந்து ஓடி
ஒளிகின்றன

ஒரு துளி
மழைக்காக
காத்துக்கிடக்கிறது
கரிசல் காட்டில்
ஒரு நெல் மணியும்
ஒரு நூறு உசுரும்....!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (5-Jan-11, 11:02 am)
பார்வை : 870

மேலே