கடவுளாய் இருப்பது சுலபமல்ல....

கடவுள்,
எல்லாரையும் போல
தானும் நம்பி விட்டார்
தன்னை கடவுளென்று
அல்லது
கடவுளே
இல்லையென்று
கொடி தூக்கவும்
முயற்சித்து விட்டார்...

யாரோ கடிவாளம்
கட்டிவிட
செய்வதறியாமல்
பயணிக்கும்
கடவுள், சாத்தான்களை
துணைக்கு
அழைப்பதாக
ஒரு தீர்க்க தரிசனம்
வருகிறது பக்தனுக்கு....

குழம்பிய கடவுள்
தன்னை யாராகவும்
மாற்றிக் கொள்ள
தயாராகி
சுலபமான வழியென்று
தானாகவே மாற்றிக்
கொள்கிறார் தன்னை....

தேர்ச்சி
பெறாததற்கெல்லாம்
கடவுளை திட்டும்
கூட்டத்தில்
கடவுளாக இருப்பது
அத்தனை சுலபமல்ல....

தூக்கில்
தொங்க காத்துக்
கிடக்கிறது
யூதாஸ் போன்ற
உண்மைகள்....

எழுதியவர் : கவிஜி (1-Oct-13, 9:52 am)
பார்வை : 227

மேலே