அரசு
ஐந்து வருட கொள்ளைக்கு
ஆயிரம் ரூபாய் முதலீடு
ஓட்டுக்கு பணம் தந்து
சீட்டை பிடிக்கும் வித்தை
மின்சாரம் இல்லாத வீட்டில்
மிக்ஸி தந்து என்ன பயன்
மளிகை பொருட்கள் வாங்க வழியில்லை
மதுபானம் மலிவு விலையில்
அத்தியாவசியப் பொருட்கள் விலையேறி போச்சு
அடிப்படை கூலி மாறவில்லை
அரசு எந்திரம் பழுதுபோச்சு
அதை எண்ணி பாத்து போடு ஓட்டு...!