அடிமைத்தனம்

என் கேள்விக்கு என்ன பதில் ?

யார் கவிஞன் ?
ரசித்து எழுதுபவனா? –வஞ்சித்து
எழுதி ரசிப்பவனா ?

எது இலக்கியம் ?
படித்ததை எழுதுவதா ? –புதிய
படைப்புக்களை எழுதுவதா ?

எது நேர்மை ?
சட்டத்திற்கு கட்டுப்படுவதா ? –மன
சாட்சிக்கு பயப்படுவதா ?

எது விமர்சனம் ?
குறைகளை சுட்டிக்காட்டுவதா ? –புதிய
குறையை உருவாக்குவதா?

எது விடுதலை?
கூண்டுலிருந்து விடுபடுவதா? –துஷ்ட
கூட்டத்திலிருந்து விலகுவதா ?

எது அடிமைத்தனம் ?
அடிமைப்படுத்துவதா ? –இன்னும்
அடிமையாய் இருப்பதா ?

யார் மகான் ?
உண்மையை உணர்ந்தவனா ? உலகுக்கு
உண்மை எதுவென உணர்த்தியவனா?

------------கேள்விகள் தொடரும் ........

காந்தி மகான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

~~~~~~~~~~~=இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (1-Oct-13, 8:55 pm)
பார்வை : 416

மேலே